ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்த 283 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
In இலங்கை January 16, 2021 6:59 am GMT 0 Comments 1439 by : Yuganthini

ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற 283 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் துன்புறுத்தல்கள் மற்றும் ஏனைய பல காரணங்களினால் ஓமான் நாட்டில் சிக்கியிருந்த நிலையில் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் -206 என்ற விமானத்தில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகைதந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.