ஓமான் வளைகுடாவில் தாக்குதல் நடத்துவதை ஈரான் நிறுத்தவேண்டும் : இங்கிலாந்து
In இங்கிலாந்து June 25, 2019 4:12 am GMT 0 Comments 1876 by : krishan

ஓமான் வளைகுடாப் பகுதியில் தாக்குதல் நடத்துவதை ஈரான் நிறுத்தவேண்டும் என்று இங்கிலாந்து கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மே மாதம் ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப்பெரிய மையத்தில் 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலை ஈரானின் பின்புலத்துடன் செயற்படும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது.
இந்தநிலையில் ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அமைச்சர் அண்ட்ரிவ் மொரிசன் ‘கல்ஃப் ஒஃப் ஓமான்’ பகுதியில் நடத்தப்படும் தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இந்தச் சுற்றுப்பயணம் குறித்து மொரிசன் கூறுகையில், ”ஈரான் அரசுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு இந்தப் பயணம் வாய்ப்பை அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சூழ்நிலை மிகவும் தீவிரமாக உள்ளதால் இங்கிலாந்து வெளியுறவுச் அமைச்சர் ஜெரமி ஹண்ட் தொடர்ந்து ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.