கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன?

உலகளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பானது மிகப்பெரிய பாரிய சவாலாக உள்ளது. இதனால் வாகனங்களை வாங்க விருப்பப்படுபவர்களும் தங்கள் விருப்பை தள்ளிப் போடுகிறார்கள்.
இந்தநிலையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ரஷ்யா மற்றும் opec நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தமையும் முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை சில நாடுகள் எண்ணெயின் விலையை நாளுக்கு நாள் உயர்த்துகின்றமையும், உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க காரணமாகிறது. அத்தோடு புவிசார் அரசியல் அழுத்தங்கள் மற்றும் வர்த்தகப் போரும் இதற்கு காரணம்.
இந்நிலையில், உற்பத்தி குறைவாகவும், தேவை அதிகமாகவும் உள்ளமை விலை உயர்விற்கு அதிக காரணமாகவுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயின் விலை உலகளவில் வீழ்ச்சி கண்டதை தொடர்ந்து, இந்தியா போன்ற நாடுகள் எண்ணெய்கும் வரி விதிக்க ஆரம்பித்தன. குறித்த விலை உயர்வினால் வெறும் போக்குவரத்து செலவு மட்டும் அதிகரிகாது என்பதே உண்மை.
அதையும் கடந்து பழங்கள், காய்கறிகள் என்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு விலை அதிகரிக்கும். இதனால் நுகர்வோரே அனைத்து விதத்திலும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
எனவே இதற்கு தீர்வு காண்பதற்கு ஒவ்வொரு நாட்டு அரசும் விலை உயர்வை குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.
ஆனால் அது அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. ஆகவே இதற்கான மாற்றுவழியொன்று உலகளவில் அவசியம் என்பதே உண்மை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.