கஞ்சிபான இம்ரானின் மருமகன் கைது
In இலங்கை April 19, 2019 5:20 am GMT 0 Comments 2023 by : Dhackshala
பாதாள உலககுழுவின் தலைவர் மாக்கந்துரே மதூஷுடன் டுபாயில் கைதாகி நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படட மொஹமட் அப்ரிடி கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்ட அவர், தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் கஞ்சிபான இம்ரானின் மனைவியினது மூத்த சகோதரியின் மகன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் அவருடன் நாடுகடத்தப்பட்ட 50 வயதான பியால் புஸ்பகுமார ராஜபக்ஷ என்பவர், குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் தொடர்ந்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.