கடற்படையினர் பயன்பாட்டுக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைநகரில் போராட்டம்
In இலங்கை February 19, 2021 5:15 am GMT 0 Comments 1398 by : Yuganthini
காரைநகர்- பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீலக்காடு பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான காணியினை கடற்படையினர் பயன்பாட்டுக்கு சுவீகரிக்க முயற்சிக்கும் செயற்பாட்டுக்கு, அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
62 குடும்பங்களுக்குச் சொந்தமான 51 பரப்பு காணியினை கடற்படையினர் பயன்பாட்டுக்கு சுவீகரிப்பதற்கு, நில அளவைத் திணைக்களத்தினரால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, காணி அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது.
காரைநகர் ஜே/45 கிராமசேவகர் பிரிவில் எலறா கடற்படை தளம் அமைப்பதற்காக 62 குடும்பங்களுடைய 51 ஏக்கர் காணி, நிலஅளவை திணைக்களத்தால் இன்றைய தினம் அளவீடு செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.