கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு
In உலகம் November 25, 2020 9:45 am GMT 0 Comments 1910 by : Jeyachandran Vithushan

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் புதிதாக 18 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961,320 ஆக அதிகரித்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை 410 ஆக உயர்ந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்பு 305 ஆக இருந்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய முடக்கம் டிசம்பர் 20 வரை நீடிக்க மத்திய மாநிலங்கள் இன்று புதன்கிழமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.