கண்டியில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது: இராணுவம்!

கண்டியில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற போதும், தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
கண்டியில் இனங்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவிவந்த நிலையில், குறித்த பகுதியின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மோதல் ஏற்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை மற்றும் விமானப்படையினர் அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸார் மற்றும் பொதுமக்களின் வேண்டுகொளுக்கு அமையவே இவ்வாறு பாதுகாப்பு அகற்றப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.