கண்டி கலவரத்தின் பின்னணியில் மஹிந்தவின் சகாக்கள்!
கண்டியில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் ஒருவர் செயற்பட்டுள்ளாரென சந்தேகிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் இதுகுறித்த உண்மைகள் அம்பலப்படுத்தப்படுமென மேலும் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் கண்டி தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து இரு இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பன மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சம்பவத்தின் பின்னணியில் வெளியிடங்களைச் சேர்ந்த குழுக்கள் செயற்பட்டதாகவும், அக்குழுக்களை அரசியல்வாதிகள் சிலரே வழிநடத்தியதாகவும் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.