கண்டி- போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
In ஆசிரியர் தெரிவு December 5, 2020 3:05 am GMT 0 Comments 1480 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கண்டி மாவட்டத்தில் போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கண்டி– போகம்பரை கிராமத்தில் 25பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் அதிகாரி வைத்தியர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் 568பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 301பேர், மாத்தளை மாவட்டத் தில் 52பேர், நுவரெலியா மாவட்டத்தில் 63பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கண்டி மாவட்டத்தில் போகம்பரை கிராமத்தில் 10பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் போகம்பரை கிராமத்தில் 13குடும்பங்களைச் சேர்ந்த 25பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவேதான் குறித்த பகுதியைத் தனிமைப்படுத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.