கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் கண்டுபிடிப்பு
In இலங்கை January 24, 2021 5:08 am GMT 0 Comments 1574 by : Dhackshala

வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெளிப்புறத்திலிருந்து நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த சிகிச்சை மையத்தில் எறியப்பட்ட டென்னிஸ் பந்துகளிலேயே இவ்வாறு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் பாவனைக்காக இவ்வாறு போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் எறியப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
குறித்த டென்னிஸ் பந்தினுள் ஹெரோயின் மற்றும் கஞ்சா நிரப்பப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தொிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.