கனடா எல்லையின் ஊடாக மெக்சிகோ நாட்டவர்களை கடத்த முற்பட்ட பெண் கைது!

கனேடிய எல்லை வழியாக ஆறு மெக்சிகோ நாட்டவர்களை அமெரிக்க நாட்டிற்குள் கடத்த முற்பட்ட அமெரிக்க பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் வட கரோலினா சேர்ந்த கார்மென் மெலரி ஃபெருபுரோனோ பெர்மாமோ என்ற 31வயது பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஆறு மெக்சிகோ நாட்டவர்களுடனும் கனடா எல்லைக்கருகே வெர்மான்ட் வீதியில் காரில் சென்றுக்கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த ஆறு மெக்சிகோ நாட்டவர்களும், 21 வயது முதல் 54 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதோடு, ஆறு பேரையும் மீண்டும் மெக்சிகோவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.