கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்
In இலங்கை November 24, 2020 4:05 am GMT 0 Comments 1503 by : Yuganthini

கனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் இலங்கைத் தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர் விருதை பெற்றுள்ளார்.
கடனாவின் உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்ற விருதினை அவருக்கு வழங்கி, பாராட்டி கௌரவித்துள்ளனர்.
யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மதியாபரணம் வாகீசனுக்கு (1988ம் ஆண்டு உயர்தரம்) கல்லூரி நிர்வாகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
குறித்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் இலங்கைத் தமிழ் கனடியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.