கனேடிய அரசியல் ஆர்வலருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை!

முஸ்லிம்களின் கடவுளான அல்லாஹ்வை, சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்த கனேடிய அரசியல் ஆர்வலருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
22 வயதான லோரன் சவுத்தன் என்ற அரசியல் ஆர்வலர், பிரித்தானியாவில் கடந்த பெப்ரவரி மாதம் ‘அல்லாஹ் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்பது போன்ற செய்திகளைக் கொண்ட கையேடுகளை விநியோகித்தார்.
இதன்பிறகு, கடந்த மார்ச் 13ஆம் திகதி மீண்டும் அவர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றபோது கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதன்போதே அவருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
எனினும், இதை ஒரு ஆய்வுக்காகத்தான் செய்ததாகவும், மக்கள் இத்தகைய கருத்துக்களை எவ்விதம் எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆனால் இதனை முழுமையாக மறுத்துள்ள பிரித்தானியா, லோரன் சவுத்தன் பிரித்தானியாவுக்குள் நுழைவது பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதன் அடிப்படையிலேயே அவருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.