கன்பராவில் அவசர காலநிலை பிரகடனம்!
In அவுஸ்ரேலியா January 31, 2020 8:26 am GMT 0 Comments 2472 by : Benitlas

அவுஸ்ரேலிய தலைநகர் கன்பராவில் அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலிய தலைநகரான கன்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
கன்பராவில் கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீ என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னிக்கும் மெல்போர்னுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த சிறிய பிரதேசத்தில் சுமார் 400,000 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2003ஆம் ஆண்டில், கன்பராவின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 500 பேர் காயமடைந்தனர் மற்றும் 470 வீடுகள் அழிந்தன.
இதேபோன்ற மேலும் ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.