கம்போடிய கட்டட விபத்து : 7 பேர் மீது வழக்கு பதிவு – நால்வர் கைது!

கம்போடியாவில் அண்மையில் இடம்பெற்ற கட்டட விபத்தினைத் தொடர்ந்து 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கம்போடியாவின் சிஹானோக்வில் நகரில் கடந்த சனிக்கிழமை ஏழு மாடிக்கட்டம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 23 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் குறித்த விபத்தினையடுத்து 5 சீனர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த குறித்த கட்டடத்தின் உரிமையாளர் செங் குன் மீது அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சீனாவைச் சேர்ந்த கட்ட ஒப்பந்ததாரர், கட்டுமான மேலாளர், பொறியாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், விபத்து தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள சீன நாட்டவர் ஒருவரும், வியட்நாம் மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த இருவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கம்போடிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.