கரடி கடித்ததில் கடும் காயங்களுக்கு உள்ளான விவசாயி- முல்லைத்தீவில் சம்பவம்
In இலங்கை January 26, 2021 6:44 am GMT 0 Comments 1320 by : Yuganthini

புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக்கு சென்ற விவசாயி, கரடி கடித்ததில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோம்பாவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு கைவிரல் ஒன்று முறிந்த நிலையிலும் காலிலும் கையிலும் கரடியின் கடிகாயங்களுக்கு உள்ளான நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னாகண்டல் பகுதியிலுள்ள தனது வயலை பார்வையிட நண்பருடன் சென்றுவிட்டு திரும்பியபோது, நடந்துவரும் பாதையின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து கரடி தாக்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து நண்பரின் உதவியுடன் வயல்பகுதியில் இருந்து வெளியேறி, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றார். இதன்போது மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அவரை மாற்றியுள்ளனர்.
அண்மையில் பெய்த மழையினால் காட்டில் வெள்ளநிலை வற்றாத நிலை காணப்படுகின்ற நிலையில் காட்டிலுள்ள யானை, கரடிகள் மேட்டு நிலங்கள் நோக்கி வந்து மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.