News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • சட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
  • இலங்கை வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்
  • பிரான்ஸில் கண்களைக் கவரும் நீஸ் கேளிக்கை விழா
  • 30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!
  • பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. கரீபியன் பிரீமியர் லீக்: ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

கரீபியன் பிரீமியர் லீக்: ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

In கிாிக்கட்     September 6, 2018 6:08 am GMT     0 Comments     1456     by : Anojkiyan

கரீபியன் பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 27ஆவது லீக் போட்டியில், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, புள்ளி தரவரிசைப்பட்டியில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ரினிடெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும், கயானா அமெசோன் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கயானா அமெசோன் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக கொலின் முன்ரோ 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து சொஹைல் டன்வீர் மற்றும் ரொமாரியா செப்பர்ட் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கயானா அமெசோன் அணி, 17.4 ஓவர்கள் நிறைவில் 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அந்த அணி 70 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ரொஷோன் பிரைமஸ் ஆட்டமிழக்காது, 36 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் அலி கான் 3 விக்கெட்டுகளையும், கரி பியர், டுவைன் பிராவோ மற்றும் பவாட் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி சார்பில், 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கொலின் முன்ரோ, தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • கரீபியன் பிரீமியர் லீக்: மூன்றாவது முறையாக மகுடம் சூடியது ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி!  

    கரீபியன் பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரில், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, மூன்றாவது முறையாக மகுடம் சூடிய

  • கரீபியன் பிரிமியர் லீக் வௌியேற்ற சுற்றில் நெவிஸ் பெட்ரியட்ஸ் அணி வெற்றி!  

    கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் வௌியேற்ற சுற்றுப் போட்டியில் நெவிஸ் பெட்ரியொட்ஸ் அணி 2 விக்கட்டுகளால

  • கரீபியன் பிரீமியர் லீக்: கயானா அமேசோன் வோரியஸ் அணி வெற்றி  

    கரீபியன் பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 30ஆவது லீக் போட்டியில், கயானா அமேசோன் வோரியஸ் அணி 6 விக்

  • கரீபியன் பிரீமியர் லீக்: செயிண்ட்.கிட்ஸ் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி வெற்றி  

    கரீபியன் பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின், 26ஆவது லீக் போட்டியில், செயிண்ட்.கிட்ஸ் நெவிஸ் பெட்ரியோ

  • கரீபியன் பீரிமியர் லீக்: செயின்ட்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியொட்ஸ் அணி வெற்றி  

    கரீபியன் பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 25ஆவது லீக் போட்டியில், செயின்ட்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியொ


#Tags

  • Caribbean Premier League
  • Guyana Amazon Warriors
  • Trinbago Knight Riders
  • கயானா அமெசோன் அணி
  • கரீபியன் பிரீமியர் லீக்
  • ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி
    பிந்திய செய்திகள்
  • சட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
    சட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
  • பிரான்ஸில் கண்களைக் கவரும் நீஸ் கேளிக்கை விழா
    பிரான்ஸில் கண்களைக் கவரும் நீஸ் கேளிக்கை விழா
  • 30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!
    30 இற்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டு கொள்ளை!
  • பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு
    பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார் அதிர்ச்சியில் உயிரிழப்பு
  • லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
    லண்டனை சேர்ந்த திருநங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்!
  • சூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு
    சூப்பர் மூன் – வானில் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு
  • பிரித்தானிய இளவரசர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள விடயம்!
    பிரித்தானிய இளவரசர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள விடயம்!
  • போலிக்கடவுச் சீட்டுக்களுடன் லண்டன் செல்லும் இலங்கையர்கள்!
    போலிக்கடவுச் சீட்டுக்களுடன் லண்டன் செல்லும் இலங்கையர்கள்!
  • மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு!
    மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு!
  • மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்
    மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.