கர்நாடகாவில் இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்!
In இந்தியா January 1, 2021 9:11 am GMT 0 Comments 1343 by : Krushnamoorthy Dushanthini

கர்நாடகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன.
அத்துடன் 6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிப்புறக் கல்வித் திட்டத்தின் (வித்யாகமா) மூலம் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு சென்று பாடங்கள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்று படிபடியாக குறைந்து வருகின்றது. அத்துடன் பிரித்தானியாவில் பரவி வருகின்ற கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களால் புதிய கொரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் நிலவி வருவதால், மாநிலத்தில் கொரோனா தொற்றைத் தடுக்க வல்லுநர்கள் கொண்ட குழு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.