கர்நாடக இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி விராட் கோலி பெற்ற வெற்றி போல் உள்ளது – ப.சிதம்பரம்!

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெற்ற வெற்றி டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற வெற்றிபோல் உள்ளது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கர்நாடகம் மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 2ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தநிலையில் முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் இது தொடர்பாக தனது டுவிட்டரில் பக்கத்தில்,
கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் ம.ஜ.த பெற்ற வெற்றி டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற வெற்றியைப்போல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் ம.ஜ.த கூட்டணி கட்சி 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெற்றுக்கொள்ளும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது என தெரிவித்து இதில் கூட்டணி பலன் தந்துள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.