கல்முனை மாநகர சபையின் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்ததமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள்!
In இலங்கை February 4, 2020 9:13 am GMT 0 Comments 1632 by : Jeyachandran Vithushan

கல்முனை மாநகர சபையினால் நடத்தப்பட்ட இலங்கையின் 72வது சுததந்திர தின வைபவத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, முஸ்லிம் உறுப்பினர்கள் என மொத்தம் 19 உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் ஏ.எம். றக்கீப் தலைமையில் கல்முனை ஐக்கிய சுதந்திர சதுக்கத்தில் பொலிஸ் கடற்படை மாநகர சபை உறுப்பினர்கள், சர்வ மத தலைவர்களின் பங்களிப்புடன் சுதந்திர தின நிகழ்வு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சபை ஊழியர்கள், வர்த்தக சங்க பிரதிநிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வைபவத்திற்கு மேற்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 07 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 03 பேர், தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டுத் தெரிவான சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் 09 பேர் என மொத்தம் 19 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அவர்கள் கலந்துகொள்ள வில்லையென்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.