கல்விக்கு கைகொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருக்கிறார்.
அவ்வப்போது சமூக கருத்துக்களையும் பகிர்ந்து வரும் ஜி.வி. இன்று(ஞாயிற்றுக்கிழமை) அவரது ட்விட்டர் பக்கத்தில் அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது,
கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவை. அது அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது.
அதற்கு நாம் இப்போது முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கனவே கல்வி என்பது வியாபரமாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் ஏழைகளுக்கு இலவச கல்வி என்பதே சாத்தியம் இல்லாமல் போய்விடும்.
உலக அளவில் சாதித்த பல தமிழர்கள், அரசு பள்ளிகளில் படித்தவர்களே“ என கூறினார்.
#education … keep spreading this .. let’s unite together for a better tomorrow pic.twitter.com/x9wvnIGsvR
— G.V.Prakash Kumar (@gvprakash) September 9, 2018
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.