கல்வியே இலங்கை – இந்திய நாடுகளின் முக்கிய தூண்கள்: இந்திய தூதுவர்

கல்வியும், திறன் அபிவிருத்தியுமே இலங்கை – இந்திய நாடுகளின் முக்கிய தூண்கள் என, இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டிருந்த இந்திய தூதுவர், அங்கு அதிதி உரை ஆற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதுவர் கிழக்கில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொண்டிருந்தார்.
அதன்படி நேற்று மட்டக்களப்பில் இந்திய வீட்டுவசதி செயல்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டார்.
முன்னதாக திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்து, கலந்துரையாடியதுடன், திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கும் சென்று ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.