தொடரும் கையெழுத்து வேட்டை: விடுவிக்கப்படுவாரா சுதாகரன்?

தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் மூன்றாவது நாளாகவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ச்சியாக இக்கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
குறித்த அரசியல் கைதியின் பிள்ளைகளினுடைய எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்து, கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
களுவாஞ்சிக்குடி பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு கையெழுத்துக்களை பதிவுசெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த வாரம் கிளிநொச்சியில் மரணமானார். இதனையடுத்து அவர்களது பிள்ளைகள் பெற்றோரின் துணையின்றி வாழ்ந்து வரும் நிலையில், கருணையின் அடிப்படையில் சுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பரவலாக கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.