களைகட்டியுள்ள வெப்பக்காற்று பலூன் திருவிழா!

வியட்நாமில் வெப்பக்காற்று பலூன் திருவிழா களைகட்டியுள்ளது.
குறிப்பாக வியட்நாமின் ஹியூ நகரில் பலவிதமான வண்ணங்கள், வடிவங்களில் வானை வலம்வரும் பலூன்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது.
வெப்பக்காற்று பலூன்களைப் பார்த்து ரசிப்பதோடு அதில் செல்லும் வாய்ப்பும் அங்கு செல்லும் சுற்றுப்பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஹியூ நகரில் வியட்நாமியப் போரால் சேதமடைந்த கட்டடங்களையும் கல்லறைகளையும் வானிலிருந்து பார்க்கும் வாய்ப்பையும் வெப்பக்காற்று பலூன் அனுபவம் சுற்றுலாப்பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் வழங்குகிறது.
பலூனில் பறந்து பார்ப்பதில் ஆர்வத்தை மக்களிடையே உண்டாக்குவதே இதன் நோக்கம் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.