கழிவகற்றல் தொடர்பாக யாழ்.மாநகர சபை முக்கிய அறிவுறுத்தல்

வாகனங்களில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் போது வலைகளால் மூடப்பட்டு கொண்டுசெல்லப்பட வேண்டுமென யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.நகர் பகுதிகளில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள், கழிவுகளை ஏற்றிச் செல்லும்போது வலைகள் போடப்படாமல் கொண்டுசெல்லப்படுவதனால் அவை வீதிகளில் விழுந்து வீதிகளில் செல்வோருக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.
இது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வந்த நிலையில், யாழ்.மாநகர சபை ஆணையாளர் மேற்கண்டவாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.