கவின் இயக்கத்தில் நடிக்கின்றார் முகின்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்த முகின் நடிக்கும் புதிய படத்தை கவின் என்பவர் இயக்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கொள்ளையடித்தவர் முகின். இவர் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்திற்கு வேலன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை கவின் என்பவர் இயக்குகிறார்.
தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.
அழகான ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகும் இதில் முகினுக்கு ஜோடியாக மீனாக்ஷி நடிக்கிறார். மேலும் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு முறைகளை, முறையாக கடைப்பிடித்து, பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.