காங்கேசன்துறை கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் மீட்பு
In இலங்கை December 28, 2020 3:47 am GMT 0 Comments 1405 by : Yuganthini

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் மீட்டனர்.
எனினும் அதனைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா போதைப்பொருள் பொதிகளை, நீதிமன்றில் பாரப்படுத்தப்படுவதற்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.