‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் முழு வசூல் விபரம்
In சினிமா April 29, 2019 7:45 am GMT 0 Comments 1935 by : adminsrilanka

ராகவா லோரன்ஸின் இயக்கத்தில் ‘காஞ்சனா 3’ திரைப்படம் வெளியாகிய ஒரு வாரத்தில் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இத்திரைப்படம் தெலுங்கில் ஒரே வாரத்தில் 14 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேநேரம், மொழியாக்கம் செய்யப்பட்ட படங்களில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. எனினும் இது முதல் வார முடிவில் 60 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கின்றது. அந்தவகையில், உலகம் முழுவதும் முதல் வார முடிவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
‘காஞ்சனா 3’ படம் வெளியான முதல் நாளே தமிழ் ரொக்கர்ஸ் தனது இணையதளத்தில் முழுமையாக வெளியிட்ட நிலையில், வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
த்ரில்லர் கலந்த அக்ஸன் காட்சிகளுடன் நகைச்சுவை கலந்த, அதிகம் பயப்படுத்தும் காட்சிகளுடன் இப்படம் கடந்த 19ஆம் திகதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிது.
இத்திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ், வேதிகா, ஓவியா, கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.