காட்டு தீ காரணமாக கைவிடப்பட்டது ஓபன் டெனிஸ் தொடரின் முக்கிய போட்டி!

காட்டு தீயால் உருவாகியுள்ள மோசமான புகைமண்டலத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மெல்பேர்னில் இடம்பெற்றுவரும் அவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ் தொடரின் நடுவில் இருமலால் பாதிக்கப்பட்ட வீராங்கனை ஒருவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
சுவிஸ் வீராங்கனைக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்த ஸ்லோவேனிய வீராங்கனை டலியா ஜகுபொவிக் தீடீர் என நிலத்தில் விழுந்து பலமாக இரும ஆரம்பித்துள்ளார்.
அதன் பின்னர் அவருடன் உரையாடிய நடுவரும் அதிகாரிகளும் அவரை அங்கிருந்து அழைத்து சென்றதுடன் போட்டி கைவிடப்பட்டது.
என்னால் நடக்க முடியவில்லை நான் நிலத்தில் விழுந்து விடுவேனோ என அஞ்சினேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு ஆஸ்மா பிரச்சினையோ சுவாசப்பிரச்சினையோ இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் என்னால் சுவாசிக்க முடியாத நிலையேற்பட்டது அதனால் நிலத்தில் விழுந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.