காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம்!
In இலங்கை February 2, 2021 6:27 am GMT 0 Comments 1422 by : Dhackshala
வலிந்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளது சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கவன ஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போராட்ட பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் அறவழி போராட்டத்தினை அவர்கள் ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், சுழற்சி முறையிலான குறித்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் 6ம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்றைய போராட்டத்தில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் என உறவுகள் வலியுறுத்தியதுடன், சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.