காணாமல்போனோர் தொடர்பான விவகாரம்: சர்வதேச மன்னிப்பு சபை அரசாங்கத்துக்கு முன்வைத்த கோரிக்கை
In இலங்கை November 28, 2020 3:27 am GMT 0 Comments 1347 by : Yuganthini
காணாமல் போனோரது உறவினர்களுக்கு உரிய நீதியையும் நட்டயீட்டையும் இலங்கை அரச அதிகாரிகள் வழங்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுசெயலாளரது அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் க்ரிஃப்த் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “போரினால் அல்லது அரசியல் நெருக்கடிகளால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் பட்டியலை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.
இது சிறந்ததோர் நகர்வாகவே கருதப்படுகின்றது. மேலும், நீண்டகாலமாக தங்களது உறவுகளைத் தேடி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
ஆகையால் இவ்விடயங்களில் அரசாங்கம் இனியும் காலம் தாமதிக்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடியாக முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.