காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு
In ஆசிரியர் தெரிவு November 27, 2020 6:44 am GMT 0 Comments 1486 by : Yuganthini

காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் வெளியிட்டுள்ளது.
குறித்த விபரங்களை கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், மன்னார் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாக கிடைத்த முறைப்பாடுகள், மாவட்ட செயலகங்கள் ஊடாக பெறப்பட்டு பின்னர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாடுகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பேரில் ஆயுதப்படையினரால் வழங்கப்பட்ட போரில் காணாமல்போன படையினரின் விபரம் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் வசிக்கும் காணாமல்போனோரின் உறவினர்களிடம் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
அந்தவகையில் குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்களை காணாமல்போனோரின் உறவினர்கள் மீளாய்வு செய்வதுடன், ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அவற்றை அறிவிக்குமாறு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.