காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்
In இலங்கை December 3, 2020 2:54 am GMT 0 Comments 1429 by : Yuganthini
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவினர்களை மீட்க கோரி நடத்திவரும் போராட்டப்பந்தலுக்கு மேல், மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது.
வவுனியா- கண்டி வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1384 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட கடும் காற்றினால் பந்தல் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் காணப்பட்ட மரத்தில் இருந்து பாரிய கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையினால், பந்தல் சேதமடைந்துள்ளது.
குறித்த பந்தலுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான வயோதிப தாய்மார் சிலர் இரவில் தங்கி வருகின்ற போதிலும், அசாதாரண நிலை காரணமாக நேற்று இரவு குறித்த பந்தலுக்குள் எவரும் தங்கியிருக்காமையினால் உயிர்ச்சேதமோ காயமடையும் நிலையோ ஏற்பட்டிருக்கவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.