காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
In அம்பாறை January 30, 2019 7:24 am GMT 0 Comments 1356 by : Yuganthini

அம்பாறை, ஒலுவில் பகுதியிலுள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை மக்களின் பொதுத் தேவைகளுக்கு வழங்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டமொன்று அப்பிரதேச மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கழியோடை வர்த்தக குடியிருப்பாளர்கள் மற்றும் ஒலுவில் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக காணி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.
அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஏழை குடும்பங்களை அங்கிருந்து அகற்றிவிட்டு அரசியல்வாதிகளும், சில அரசாங்க அதிகாரிகளும் அந்நிலத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமானதென கூறப்படுகின்ற காணிகளை மக்களின் பொதுதேவைகளுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை பொது தேவைகளுக்கு வழங்க வேண்டிய அவசியம் குறித்த சுலோகங்களை ஏந்தி, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.