காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
In இந்தியா December 3, 2020 10:52 am GMT 0 Comments 1322 by : Krushnamoorthy Dushanthini

நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் காற்று மாசின் காரணமாக இந்தியாவில் இதுவரை நான்கரை இலட்சத்திற்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவ இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018 ஆண்டு புள்ளிவிவரப்படி நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசால் மட்டும் சுமார் 96 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது ஒரு மணி நேரத்தில் 10 பேர் இறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே நிலக்கரியின் உபயோகத்தை படிப்படியாக குறைக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வெப்பமயமாதலை தடுப்பதுடன், மரணங்களையும் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து அதனால் அதிக இறப்பு நிகழும் இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் குறித்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.