காலநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிறைவு!
In இங்கிலாந்து April 25, 2019 6:37 am GMT 0 Comments 2089 by : Risha

லண்டனில் கடந்த பத்து நாட்களாக நீடித்த காலநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் ஆபத்துக்களை முன்னிலைப்படுத்தி பிரித்தானிய தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று இடையூறு செய்யப்பட்டு வந்தது.
இப்போராட்டங்களின் போது சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகளாவிய காலநிலை நெருக்கடிக்கு முடிவுகட்டும் நோக்கில் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்பிள் ஆர்ச் மற்றும் நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தமது போராட்ட முகாம்களை அகற்றுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால், எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.