காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பு!
In இங்கிலாந்து April 23, 2019 12:58 pm GMT 0 Comments 2182 by : shiyani

பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை விவாதிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த ஒருவார காலமாக எஸ்ரிங்க்ஷன் ரெபல்லியன் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக இதுவரை 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலுவான திட்டமொன்றை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் இன்று நள்ளிரவுக்குள் பாராளுமன்ற சதுக்கத்திலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் அகற்றப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு பாரிய அளவில் இடையூறை ஏற்படுத்தியுள்ள இப்போராட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக 10000 க்கும் மேற்பட்ட பொலிஸார் மத்திய லண்டனில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.