காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம் வழங்கவேண்டுமென கோரிக்கை!

பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம் வழங்கவேண்டுமெனப் பெருமளவானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கனேடியர்களுக்கான பகிரங்கக் கோரிக்கை ஒன்றைச் சுமார் 100 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்கள்.
இதில் விஞ்ஞானிகளும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், மாணவர்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
தற்போதைய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக காலநிலை மாற்றம் விளங்குகிறதென்று குறிப்பிட்டுள்ள அவர்கள், அதன் பாதிப்புக்கள் எவ்வாறானதாக இருக்குமென அறிந்து கொள்ளுமாறும், இந்த விடயத்தில் ஒவ்வொரு கட்சியும் என்ன தீர்வுகளை முன்வைக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கனடாவில் பொதுத் தேர்தலில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ளவை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.