காலநிலை மாற்ற போராட்டம்: மூவர் மீது கடும் குற்றச்சாட்டு
In இங்கிலாந்து April 18, 2019 7:51 am GMT 0 Comments 2034 by : Varshini
காலைநிலை மாற்றம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
டொக்லாண்ட் இலகு ரயில் (DLR) கூரையில் ஏறிய ஆணொருவரும் பெண்ணொருவரும், பதாதையை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் ரயில் படியில் நின்றவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், ரயில் சேவைகளை தடுத்து சட்டத்திற்கு முரணாக செயற்பட்டதாக குறித்த மூவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்திற்கு ஆதரவாக லண்டனில் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில், இதுவரை சுமார் 400 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீதிகளை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.