காஷ்மீரில் ஜனநாயக நடைமுறையைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி- நரவானே

காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளைச் சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக இராணுவத் தளபதி நரவானே தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் வடமேற்கு எல்லையில் பயங்கரவாதம் தொடர் அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால், பனிப்பொழிவு அதிகரிக்கும் முன்னர் நாட்டின் எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதிகளின் முயற்சிகள் அனைத்தையும் இராணுவம் முறியடிக்குமென நரவானே தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.