கிரிக்கெட் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு அர்ஜுனவிடம் நாமல் கோரிக்கை
In இலங்கை January 28, 2021 8:14 am GMT 0 Comments 1557 by : Jeyachandran Vithushan

இலங்கையில் கிரிக்கெட் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தறையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், உள்ளூரில் கிரிக்கெட்டுக்கு குழுக்களை நியமிப்பது நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரு பதிலாக அமையாது என்றும் குறிப்பிட்டார்.
எனவே நாட்டில் எந்தவொரு விளையாட்டும் அரசியல் மயமாக்கலில்லாமல் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜுன ரணதுங்கவை ஒரு திறமையான கிரிக்கெட் வீரர் என்பதுடன் ஒரு நல்ல தலைவர் என்றும் பாராட்டிய நாமல் ராஜபக்ஷ, லங்கா பிரீமியர் லீக்கின் போது ஆலோசனை வழங்கியதாகவும், ரணதுங்காவின் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
2015 க்கு முன்னர் உலகெங்கிலும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கொண்டாடப்பட்டனர். ஆனால் அதற்கு பின்னர் அரசியல்மயமாக்கல் காரணமாக கிரிக்கெட் மோசமடைந்துள்ளது என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.