கிறைஸ்ற்சேர்ச் தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது – முக்கிய தகவல் வெளியானது!
In இலங்கை April 30, 2019 4:19 pm GMT 0 Comments 2549 by : Jeyachandran Vithushan

கிறைஸ்ற்சேர்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்திருததாக நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல், நியூசிலாந்து மசூதி தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்கும் முகமாக நடத்தப்பட்டது என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்த கருத்திற்கு ஏற்கனவே நியூசிலாந்து பிரதமர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) துணை பிரதமரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் கிறைஸ்ற்சேர்ச் மசூதி துப்பாக்கிச் சூடுகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது என வெளியிட்ட கருத்தை விமர்சித்துள்ள அவர் தமது நாட்டை இலங்கை தவறாக பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஒன்றும் இல்லாமல் அடிப்படையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிறைஸ்ற்சேர்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்திருததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.