கிளிநொச்சியில் அதிரடி சுற்றிவளைப்பு – ஒருவர் கைது
In இலங்கை April 28, 2019 4:15 am GMT 0 Comments 2174 by : Dhackshala
கிளிநொச்சியில் பொலிஸாரும் படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு அருகாமையில் உள்ள பள்ளிவாசலிலும் இதன்போது தேடுதல் மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பகுதி முழுமையாக சோதனையிடப்பட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையின்போது அரபு மொழி பொறிக்கப்பட்ட போஸ்டர் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரும் படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தம்மை அடையாளப்படுத்தும் ஆவணங்களுடன் வருகை தந்து பதிவுகளும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.