கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து!
In இலங்கை February 19, 2021 4:48 am GMT 0 Comments 1417 by : Yuganthini
கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில், சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நெல் ஏற்றி சென்ற பாரஊர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். இதன்போது யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பாரஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் மோதிய பாரஊர்தி, பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், சாரதி சாதாரண காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.