கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு- மக்களுக்கு எச்சரிக்கை!

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி குளங்களில் இன்று (புதன்கிழமை) இரவு பத்து மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் நாளை வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது, அக்கராயன்குளம் 11 அடி 04 இஞ்ச் “FSL 25′-0”, கரியாலை நாகமடுவான் குளம் 02 அடி 03 இஞ்ச் FSL 10′, புதுமுறிப்புக் குளம் 11 அடி 07 இஞ்ச் “FSL 19′, குடமுருட்டிகுளம் 05 அடி 04 இஞ்ச் “FSL 8′ 00″, வன்னேரிக்குளம், 07 அடி 04 இஞ்ச் FSL 9′-06” என நீர் அளவைக் கொண்டுள்ளன.
இதேவேளை, இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 19 அடியாக உயர்ந்துள்ளதுடன் கனகாம்பிகைக் குளத்தின் நீர் மட்டம் எட்டு அடியாகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தறபோது பெரியகுளம் 4 இஞ்ச் வரை வான்பாய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை, கனகாம்பிகைக் குளம் வான் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.