கிளிநொச்சியில் ‘ஜெனிவாவிற்கு அப்பால்’ எனும் மூன்றாவது கலந்துரையாடல்!
In இலங்கை January 10, 2021 3:21 am GMT 0 Comments 1404 by : Yuganthini
ஜெனிவா விடயங்களை கையாள்வது தொடர்பில் பொது நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் ‘ஜெனிவாவிற்கு அப்பால்’ எனும் கலந்துரையாடலின் மூன்றாவது கலந்துரையாடல் கிளிநொச்சயில் இடம்பெற்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான குறித்த கலந்துரையாடல், தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் புனித திரேசா மண்டபத்தில் ஆரம்பமானது.
குறித்த கலந்துரையாடலில் திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் அதி வணக்கத்துக்குரிய தோமஸ் இமானுவேல் ஆண்டகை, அருட் தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆயு சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மு.நா.ம.உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, வட.மகாணசபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், கலந்துரையாடலின் நிறைவில் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.