கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
In இலங்கை January 3, 2019 3:20 am GMT 0 Comments 1343 by : Dhackshala
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையினரால் குறித்த வேலைத்திட்டம், நேற்றும் (புதன்கிழமை) நேற்று முன்தினமும் கிளிநொச்சியில், வெள்ளம் தேங்கி நின்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மலேரியா தடை இயக்கத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, வெள்ள நீர் தேங்கி நின்ற பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பரவாமல் தடுப்பதற்காக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் கண்டாவளை பகுதியிலும், நேற்று கரைச்சி பிரதேச செயலர் பிரிவிலும் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.