கிளிநொச்சியில் மாவீரர் நாள் தடை: நகர்த்தல் பத்திர விசாரணை நாளை

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவுகூரல் தடை உத்தரவு தொடர்பான நகர்த்தல் பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ளது.
குறித்த பிரேரணை சட்டத்தரணிகள் ஊடாக இன்று (திங்கட்கிழமை) முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த பத்திரத்தை விசாரணைக்காக எடுத்துக்கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சின்னப்பு சிவபாலசுப்ரமணியம், குறித்த விசாரணையை நாளைய தினத்திற்கு திகதியிட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் அடங்கலாக 17 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.