கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
In இலங்கை November 6, 2018 3:47 pm GMT 0 Comments 1538 by : ஜெயச்சந்திரன் விதுஷன்
கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த எரிபொருள்தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உரியிழந்துள்ளார். மற்றொருவர் வைத்தியசாலைக் கொண்டு சென்ற போது இறந்துள்ளார்.
இந்த விபத்தில் இறந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த செல்வராஜா கஜீபன் வயது 18 என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இதுவரை மற்றைய இளைஞன் அடையாளம் காணப்படவில்லை.
தீபாவளி தினமான இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது அப் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.