கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து வெளியேறினர்
In இலங்கை January 5, 2021 11:11 am GMT 0 Comments 1522 by : Yuganthini

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து, இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியேறினர்.
இன்று காலை 8.30 மணிவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையத்திலிருந்து, சிகிச்சை முடிவடைந்த நிலையில் இன்று 20 பேர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இன்று காலை 8.30 மணிவரை 28 புதிய நோயாளர்கள் குறித்த சிகிச்சை நிலையத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், அவர்களில் 28 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுடன் மொத்தமாக 77 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 22 ஆண்களும் 55 பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை சிகிச்சை பெற்று வருபவர்களில் சக்கரை நோயாளி ஒருவரும் குருதி அழுத்தம் உள்ளவர்கள் மூவரும் சிறுநீரக நோயாளர் ஒருவரும் சக்கரை நோய் மற்றும் குருதி அழுத்த நோய் இரண்டும் உடைவர்கள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 5 வயதுக்குட்பட்ட ஒருவரும் 5- 13 வயதுடையவர்கள் மூவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்வர்கள் மூவரும் அடங்குவதுடன் ஏனையோர் இளவயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.